அன்பு நண்பர்களே புதிய முயற்சி இது. தங்களின் மேலான கருத்துக்களை Guest Book ல் பதிவு செய்வீர். நன்றி

Sunday, January 15, 2012


             உருத்திராட்சம்
உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.

இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும்.

உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.

*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.

*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.

*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள்.

அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.

தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'

-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.         யாரை எப்படி வணங்க வேண்டும்


* இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.

* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

Tuesday, March 29, 2011

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கங்கை நதி கலக்கும் இடம் எது ?
2.சிந்துநதி கலக்கும் இடம் எது ?
3.ரைன் நதி கலக்கும் இடம் எது?
4.டினிஸர் நதி கலக்கும் இடம் எது ?
5.ஜம்பனி நதி கலக்கும் இடம் எது ?
6.சபைன் நதி கலக்கும் இடம் எது ?
7.கொலம்பியா நதி கலக்கும் இடம் எது ?
8.ஜபுரா நதி கலக்கும் இடம் எது ?
9.எப்ரோ நதி கலக்கும் இடம் எது ?
10.பிரம்மபுத்திரா நதி கலக்கும் இடம் எது ?
பதில்கள்:
1.வங்காளவிரிகுடா, 2.அரபுக்கடல்,3. வடகடல்,4.கருங்கடல், 
5.இந்தியப்பெருங்கடல், 6.மெக்ஸிகோ வளைகுடா, 
7.பசிபிக் பெருங்கடல், 8.அமேசான், 9.மத்திய தரைக்கடல்,
10.வங்காளவிரிகுடா.

Sunday, March 27, 2011

Dell Computer

 
 
    பிப்ரவரி 23
பெயர் : மைக்கேல் டெல்,
பிறந்த தேதி : பிப்ரவரி 23, 1965
இவர் டெல் நிறுவனத்தின் (Dell,Inc.)நிறுவனர்.
டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த
யூதகுடும்பத்தவர்.தனது பதினைந்தாவது வயதில்
தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே
ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப்
பூட்டினார்.பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த
காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற
நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது
பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு
நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார்.
1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர்
கார்ப்பொரேசன்  (Dell Computer Corporation)
என மாற்றினார்.
                    நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

அந்த முதியவருக்கு இருமல். கடுமையானது அல்ல. ஆயினும் நீண்ட நாட்களாத் தொல்லை கொடுக்கின்றது. சளி கிடையாது. வெறும் வரட்டு இருமல்.

'பார்க்காத வைத்தியர் கிடையாது. (என்னையும் சேர்த்துத்தான் சொன்னார்) செய்யாத சிகிச்சையும் கிடையாது. செத்தாப் பிறகுதான் நிற்கும்போலை' என மிகுந்த மனக் கவலையுடன் கூறினார்.

கேட்டபோது மனவேதனையாக இருந்தது. குற்ற உணர்வும் ஏற்பட்டது.அவரைச் சோதித்துப் பார்த்தபோது எந்த வித்தியாசமான குறிகளும் தெரியவில்லை. பழைய பரிசோதனை அறிக்கையிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மீண்டும் மிக நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு காதிற்குள்ளும் குடுமி அடைந்திருப்பது தெரிந்தது.

காதுக் குடுமி இயற்கையாக உற்பத்தியாவது. நோயல்ல. காதுக்குள் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவமே அடிப்படையானது. இது காதின் பாதுகாப்பிற்காகவே சுரக்கின்றது. வாயை மென்று உண்ணும்போது தசைகளில் ஏற்படும் அசைவுகள்மூலம் தானாகவே சிறிது சிறிதாக வெளியேறி விடுகின்றது. சிலருக்கு காதின் தோலிலிருந்து உதிரும் கலங்களும் ரோமங்களும் அதனுடன் சேர்ந்து இறுகிக் கட்டியாகி விடுவதுண்டு.

காதுக் குடுமி இயற்கையானது என்பதால் பொதுவாக எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. முன் கூறியது போல இறுகிக் கட்டியாகி விட்டால் கூட பலருக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுவதில்லை. காது கேட்பது மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மென்மையான வலி ஏற்படலாம். தலைக்கு முழுகும்போது அல்லது நீந்திய பின்னர் காது அடைப்பது போலிருப்பதுடன், வலியும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காதிற்குள் இரைச்சல் ஏற்படக்கூடும். தலைச் சுற்றும் வரக்கூடும். வெகு அரிதாகவே நாட்பட்ட இருமல் காரணமாக காதுக் குடுமி இருப்பதுண்டு. அதனால் வைத்தியர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. அந்த முதியவருக்கு தொல்லை கொடுத்த நாட்பட்ட இருமலானது காதுக் குடுமியை அகற்ற நின்றுவிட்டது.

இதை வாசித்தவுடன் நாட்பட்ட இருமல் உள்ளவர்கள் காதுக் குடுமியை அகற்றுவதற்கான ஆயுதங்களைத் தேடி ஓடவேண்டாம். என்ன ஆயுதங்கள்? காது கிண்டி, நெருப்புக் குச்சி, சட்டைப்பின், கடதாசிச் சுருள், பஞ்சு முனைக் குச்சி (Ear Buds) இப்படி இன்னும் பல. இவற்றை நீங்கள் உபயோகிப்பது ஆபத்தானது. எடுக்க முயலும்போது குடுமி வழுகி உட்புறமாகத் தள்ளுப்பட்டு செவிப்பறையை சேதமாக்கலாம். இதனால் காது செவிடுபடவும் வாய்ப்புண்டு. அல்லது கிண்டுவதால் உரசல் ஏற்பட்டு புண்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வடியலாம். இப்பொழுது காதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பஞ்சு முனைக் குச்சிகள்தான் காரணம் எனக் காது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.

காதுக்குடுமி இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள். அது கரைந்து வெளியேறுவதற்கான துளி மருந்துகளை அவர் தரக்கூடும். அது தானே கரைந்து வெளியேறும் இல்லையேல் வைத்தியர் காதைக் கழுவி அகற்றுவார். சிலருக்கு கருவிகள் மூலமும் அகற்றக்கூடும்.

காதுக் குடுமியை அகற்ற வேண்டுமா? வேண்டாமா? அகற்றுவது அவசியமாயின் எந்த முறையில் அகற்றுவது என்பன பற்றி வைத்திய ஆலோசனைப்படியே நடவுங்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஜப்பான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
2.நீயூசிலாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
3.மெக்ஸிகோ நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
4.லிபியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
5.நேபாளம் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
6.பிலிப்பைன்ஸ் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
7.ஸ்ரீலங்கா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
8.நைஜீரியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
9.பின்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
10.லெபன்னான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
பதில்கள்:
1.யென்,2.டாலர்,3.பெஸோ,4.தினார்,5.ரூபாய், 6.பெஸோ,
7.ரூபாய்,8.நெயிரா, 9.மார்க்கா,10.பவுண்ட்.